களிமண்ணால் 5 அடி விநாயகர் சிலை செய்து அசத்திய சிறுவர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2023 10:09
நத்தம், நத்தம் அருகே புதுப்பட்டியில் களிமண்ணால் தத்ருபமாக 5 அடி விநாயகர் சிலை செய்து, அதற்கு வண்ணம் தீட்டி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி அசத்திய சிறுவர்களை கிராம மக்கள் பாராட்டினர்.
நத்தம் அருகே புதுப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சிறுவர்கள் சிலர் கடந்த சில நாட்களாக விநாயகர் சதுர்த்திக்காக தாங்களாகவே களிமண்ணால் 5அடி சிலை செய்தனர். சிறுவர்களால் மிக நேர்த்தியாக முற்றிலும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி சிறுவர்களிடம் கேட்டபொழுது மண்ணுக்கும், நீருக்கும், பூமிக்கும் மாசு ஏற்படாத வண்ணம் விநாயகர் சிலையை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசை. மேலும் வரும் காலங்களில் விநாயகர் சிலைகளில் பயன்தரும் பழ மர விதைகள் மற்றும் தானியங்களை வைத்து உருவாக்குவதாக கூறியுள்ளனர் .அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து அச்சிறுவர்களை பாராட்டி வருகின்றனர்.