திருப்பதி: திருமலை திருப்பதியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று முதல் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் உற்சவரான மலையப்பசுவாமி விதம் விதமான வாகனங்களில் விதவிதமான அலங்காரத்தில் காலை மற்றும் இரவில் உலா வருவார். மேலும் ஊஞ்சல்,தங்க தேர்,பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சுவாமி உலா வரும் போது பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவில் கோபுரங்கள் உள்ளீட்ட பல்வேறு இடங்கள் வண்ண விளக்ககளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.