பதிவு செய்த நாள்
19
செப்
2023
11:09
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில், மாடவீதியில் வலம் வந்தார். ஆந்திர மாநிலம், திருப்பதி - திருமலையில், நேற்று முதல், நவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான இன்று சின்ன சேஷ வாகனத்தில், மலையப்பசுவாமி, கிருஷ்ணர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். பின், ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவில், சரஸ்வதி தேவி அலங்காரத்தில், கையில் வீணை ஏந்தி, அன்னப் பறவை வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வருகிறார். இதைக் காண, ஏராளமான பக்தர்கள் மாடவீதியில் கூடினர். வாகன சேவைக்கு முன், நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை பாடியபடி, திருமலை ஜீயர் குழாம் செல்ல, வாகன சேவைக்கு பின், கலை குழுவினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.