பதிவு செய்த நாள்
19
செப்
2023
01:09
தாவணகெரே: சித்தகங்கா பள்ளி மாணவர்கள், 12 அடி உயரத்தில் நாளிதழ்களில் ஆன விநாயகர் சிலையை நிறுவியுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், பி.ஓ.பி., சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், களிமண் உட்பட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று,
தாவணகெரேயின் சித்தகங்கா பள்ளியில், கடந்த ஏழு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காகிதத்தில் உருவாக்க திட்டமிட்டனர். இதற்காக, 10 நாட்கள் 40 கிலோ நாளிதழ்களை சேகரித்து 12 அடி உயரத்தில் நாளிதழ்களால் ஆனவிநாயகர் சிலையை உருவாக்கி உள்ளனர். இது குறித்து பள்ளி இயக்குனர் ஜெயந்த் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு உகந்த கணபதியை நிறுவபிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். யு டியூப்பில் பார்த்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத சிலையை உருவாக்கி உள்ளோம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ரசாயனமும் பயன்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.