மயிலாடுதுறை கோவிலில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மனமுருகி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2023 12:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் மற்றும் மாயூரநாதர் கோவில்களில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் (வள்ளலார்) கோவில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு கடந்த 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை வதான்யேஸ்வரர் கோவிலுக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3ம் தேதி நடைபெற்றதை முன்னிட்டு அக்கோவிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின் சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு சென்று மனமுருகி சிறப்பு வழிபாடு நடத்தினார். முன்னதாக இரு கோவில்களின் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வதான்யேஸ்வரர், மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு இரு ஆதீனங்கள் சார்பில் தமிழக முதல்வர் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாததால் நேற்று இரண்டு கோவில்களிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.