திருப்பதி; திருமலையில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக ஸ்நப்ன திருமஞ்சனம் நிகழ்வு நடைபெற்றது.
திருமஞ்சனம் நடைபெற்ற மண்டபம் முழுவதும் பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, உற்சவர் தெய்வங்களுக்கு ஸ்நபனம் செய்யும் போது, ஒவ்வொரு கட்ட அபிஷேகமும் முடிந்த பிறகு, ஒன்பது முறை மாலைகள் மற்றும் கிரீடங்கள் மாற்றப்பட்டன. ஏலக்காய், கிஸ்மிஸ், பிஸ்தா, சந்தனம், கருப்பு திராட்சை, பலவகை ரோஜா இதழ்கள், ரோஜாக்கள் மற்றும் துளசி ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலைகளால் மலையப்பசுவாமி அலங்கரிக்கப்பட்டிருந்தார். இந்த அலங்காரங்கள் அனைத்தும் திருப்பூர் மற்றும் சேலத்தைச் சேர்ந்த தமிழக பக்தர்கள் அளித்த நன்கொடையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 250 பூக்கடைக்காரர்கள் மற்றும் திருமலை தோட்ட ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது.