சிறுவர்கள் வைத்த ஏழு அடி உயர விநாயகர் சிலை; இன்று விஜர்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2023 12:09
அவிநாசி: அவிநாசி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், 7 அடியில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.
அவிநாசி காந்திபுரம் பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக வித்தியாசமான முறையில் பசுவின் மீது விநாயகர் அமர்ந்துள்ளது போல 7 அடியில் சிலையை செய்யச் சொல்லி வாங்கி காந்திபுரம் பகுதியில் உள்ள திடலில் வைத்து சுண்டல், பொரி கடலை பிரசாதமாக படைத்து வழிபட்டு வருகின்றனர். இன்று நடைபெறும் விநாயகர் விஜர்சனத்தில் கலந்து கொள்கின்றனர்.