பதிவு செய்த நாள்
20
செப்
2023
12:09
ஓசூர்:ஹிந்து, முஸ்லிம்கள் இணைந்து, தேன்கனிக்கோட்டையில் சதுர்த்தி விழா கொண்டாடியதுடன், இரு தரப்பினரும் இணைந்து ஊர்வலமாக சென்று, சிலை விசர்ஜனம் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கிசான் தெருவில், ஹிந்து, முஸ்லிம் இளைஞர்கள், பொதுமக்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். இதன்படி, விநாயகர் சிலை அமைத்து வழிபட்டனர். சிலையை நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்று, தேவராஜன் ஏரியில் விசர்ஜனம் செய்தனர். மேள, தாளம் முழங்க நடந்த விசர்ஜன ஊர்வலத்தில் முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். விநாயகர் அனைவருக்கும் பொதுவானவர். ஹிந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், முதல் ஆண்டாக இப்பகுதியில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.