பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அலைபேசி, போட்டோ, வீடியோ எடுக்கும் கருவிகளை கொண்டு வர கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது அக்., 1 முதல் நடைமுறைக்கு வருவதாக கமிஷனர் மாரிமுத்து அறிவித்துள்ளார். கமிஷனர் கூறியுள்ளதாவது: பழநி கோயிலுக்கு போட்டோ, வீடியோ எடுக்கும் கருவிகள், அலைபேசி கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இத்தகைய சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஸ்டேஷன்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வழங்க வேண்டும். இதற்கு கட்டணமாக அலைபேசிக்கு ரூ.5 பெறப்படும். தரிசனம் முடிந்த பின் அவற்றை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.