பதிவு செய்த நாள்
24
செப்
2023
03:09
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நட ராஜப் பெருமானுக்கு வரும் 28-ஆம் தேதி புரட்டாசி மாத மகாபிஷேகமும், உலக அமைதியை வலியுறுத்தி மகாருத்ர யாகமும் நடைபெ றவுள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகா மசுந்தரி சமேத ஸ்ரீமந் நடரா ஜுமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார் கழி, மாசி மாதங்களில் ஆண் டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும். ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டப முகப்பில்லும், மற்ற மாதங்களில் மாலையில் சித்சபை யின் வெளியே உள்ள கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறும். புரட்டாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு வரும் 28-ஆம் தேதி மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற வுள்ளது. இதையொட்டி, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பல்வேறு பூஜைப்பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது.
அன்றையதினம் காலையில் உச்சிகால பூஜை வரை நடைபெற்று, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியை கனகசபைக்கு எழுந்தருளச் செய்து லட்சார்ச்சனை நடைபெறும். யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீருத்ராட்சனை செய்து, தீபாராதனை நடைபெறும். பிற்பகலில் மகாருத்ர மகா ஹோமம், பின்னர் கலசங்கள் யாத்திரா தானம் செய்யப்பட்டு, மகா பிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் குழுச்செயலர் சிவராம தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.