பதிவு செய்த நாள்
28
செப்
2023
05:09
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 34.4 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், பொது உண்டியலில், 33 லட்சத்து, 63 ஆயிரத்து,446 ரூபாயும், கோசாலை உண்டியலில், 55 ஆயிரத்து 455 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 21 ஆயிரத்து 611 ரூபாயும் என, மொத்தம், 34 லட்சத்து 40 ஆயிரத்து 512 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. அதோடு, தங்கம், 35 கிராமும், வெள்ளி, 1 கிலோ 180 கிராமும், பித்தளை, 3 கிலோ, 500 கிராமும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.