சேலம் ராஜகணபதிக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2023 05:09
சேலம் : விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளான இன்று சேலம், சின்னக்கடை வீதி, ராஜகணபதி கோவிலில், 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
சேலம், சின்னக்கடை வீதி, ராஜகணபதி கோவிலில் 18ம் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் கணபதி ஹோமம், அபிஷேகம் மற்றும் ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற்றது. 12 நாள் நடைபெறும் விழாவில் நிறைவு நாளான இன்று ராஜகணபதிக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.