திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவபெருமான் காட்டிற்கு வேட்டைக்கு செல்லும் போது தேவியை மடப்புரத்தில் அமர வைத்து விட்டு காவலாக அய்யனாரையும் வைத்தாகவும், அதனாலேயே அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு ஆடி வெள்ளி உள்ளிட்ட விஷேச தினங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும், நேற்று இரவு ஏழு மணிக்குபவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் கிரீடம் சூட்டப்பட்டிருந்தது. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் திருமணமான பெண்கள், கன்னி பெண்கள் என ஏராளமான பெண்கள் அம்மனை தரிசிக்க வந்திருந்தனர். சிறப்பு பூஜைக்கு பின் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.