மானாமதுரை வீர அழகர் கோயிலில் உலக நன்மைக்காக அக்.15ல் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 05:10
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் உலக நன்மைக்காகவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டிய வருகிற அக்.15ல் லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் வருடம் தோறும் புரட்டாசி மாதம் லட்சார்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வருகிற அக்.15ம் தேதி லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு காலை 8:00 மணிக்கு சென்னை துவங்க உள்ளது.இதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு வீர ஆஞ்சநேயர் உற்சவ விழா நடைபெற உள்ளது.லட்சார்ச்சனை விழாவிற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் கோபி மாதவன் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.