பதிவு செய்த நாள்
05
அக்
2023
05:10
பெரியகுளம்: வடுகபட்டியில் திருவருட் பிரகாச வள்ளலார் பெருமானாரின் 201 வது பெருவிழாவில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றுதல் நடைபெற்றது. வள்ளலாருக்கு நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் அருகே வடுகபட்டியில் வள்ளலார் நகரில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை 201 வது வள்ளலார் பெருவிழா கோலாலமாக நடந்தது. இங்கு ஆண்டு முழுவதும் மதியம் 1:00 மணி அளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பெருவிழாவில் சைவ சமய சிவாலய திருப்பணியாளர் எஜமான் பாண்டி முனீஸ்வரர், டாக்டர் செல்வராஜ், பேரூராட்சி தலைவர் நடேசன், துணைத் தலைவர் அழகர், சுகாதார மேற்பார்வையாளர் சுப்புராஜ், ஆன்மிக பக்தர்கள் இளங்குமரன், ராஜரத்தினம், மணிகார்த்திக், திருப்பதி, பாலா, குணசேகரன், ஈஸ்வரன் ராஜவேலு, ராஜாராம் உட்பட ஏராளமான பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைவர் ரத்தினவேல், செயலாளர் வீரபுத்திரன், பொருளாளர் வாசு மணி, சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.