பதிவு செய்த நாள்
06
அக்
2023
10:10
காரைக்குடி: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி பா.ஜ.,வினர் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது.
காரைக்குடியில் உள்ள கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பா.ஜ., மாநில இளைஞரணி துணைத் தலைவர் பாண்டித்துரை ஏற்பாட்டில் நடந்த சிறப்பு பூஜையில், மாவட்டத் துணைத் தலைவர் நாராயணன், காரைக்குடி நகரத் தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் மலைக்குமார், நகர நிர்வாகிகள் கண்ணன், பழனிக்குமார் இளைஞர் அணி மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன் பிரசாந்த் செந்தில் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.