ராமர் அவதாரம் செய்து 17 லட்சம் ஆண்டுகள்.. சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது : கோமட சுவாமிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2023 10:10
அனுப்பர்பாளையம்: ஸ்ரீ கவ்மடாரியா டிரஸ்ட் மற்றும் ஜெயஸ்ரீ டேப்ஸ் சார்பில், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண உபந்யாஸம் அனுப்பர்பாளையம் புதூர், சாமிநாத புரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மதுரை அழகர் கோயில் கோமடம் சுவாமிகள் பேசியதாவது : ஆதி பகவானை பற்றி புரிந்துகொள்ள இந்த அறிவு போகாது நம்முடைய அறிவு சிற்றறிவு. அதற்கு ஞானம் வேண்டும். ஞானம் இருந்தால், மட்டுமே பகவானை காண முடியும். ராமாயண உபந்யாசத்தை கேட்வே கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். ராமாயண நூலை பூஜையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த நூலே தமக்கு பகவான்தான். இந்து மதத்தில் பல நூல்கள் உள்ளன. அனைத்து நூல்களும் நம்மை பகவானிடம் கொண்டு சேர்க்கும். எல்லோரும் சுபம் கிடைக்க வேண்டும். என்கின்றனர். அதற்கு நாம் தர்மம் செய்ய வேண்டும். தர்மம் படி நடந்தாலே சுபம் கிடைக்கும். தானங்களில் சிறந்தது ஞானதானம், உயர்ந்த யாகம் ஞான யாகம் உபந்யாசம் செய்வது பெரிய தானம். இதற்காக கிடைக்கும் பலன்களை யாராலும் கணக்கிட முடியாது. தர்மத்தின் படி வாழ ஆசைபட வேண்டும். அதைதான் பகவானும் விரும்புவார். தர்மத்தை புகற்றவே ராமர் வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு ஆதாரம் செய்தார். ஆண்கள் எல்லோரும் ராமரைப் போல வாழ வேண்டும். அதுபோல் பெண்கள் சீதாப்பிராட்டி போல் வாழ வேண்டும். நாம் இருப்பது கலியுகம் இந்த யுகத்தில் ராமரின் அவதாரம் உண்டு. சனாதனத்தை ஒருவர் அழிப்பேன் என்கிறார். சானாதனம் என்பது வாழ்வியல் முறை அதை அழிப்பேன் என்பது வடிகட்டிய முட்டாள்தனமான பேச்சு. அதை யாராலும் அழிக்க முடியாது. ராமர் அவதாரத்தில் பகவான் எல்லா தர்மத்தையும் காட்டிக் கொடுத்தார். ராமர் அவதாரம் செய்து 17 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. நாம் இன்னும் அதைப் பற்றி பேசுகிறோம். ராமாயனத்தை படித்தால் குடும்பத்தில் நிம்மதி, செல்வம் கிடைக்கும். வைகுண்டம் செல்லலாம். எல்லாபலன்களும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.