பதிவு செய்த நாள்
09
அக்
2023
12:10
உடுமலை: உடுமலை அருகே, வனப்பகுதியிலுள்ள ஏழுமலையான் கோவிலில் சுவாமி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனை மலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. தரிசனம் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு, ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, புரட்டாசி சனிக்கிழமையன்று, ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மூன்றாவது சனிக்கிழமையான நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே ஏழுமலையான் கோவிவில் குவிந்தனர். அடர்ந்த வனப்பகுதிகளில், 7 கி.மீ., துாரம் ஏழு மலைகளைக்கடந்து வந்து, 2 கி.மீ., துாரத்துக்கு வரிசையில் காத்திருந்து, ஏழுமலையானை தரிசித்தனர். பாதுகாப்பு மலை மீதுள்ள, வற்றாத சுனையில் தீர்த்தம் எடுத்து அவல், பச்சரிசி, தேங்காய் ஆகியவற்றை சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு, மலையடிவாரம் முதல் கோவில் வளாகம்வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வனப்ப குதிகளுக்குள் பிளாஸ்டிக்பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. மலையடிவாரத்தில், சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.