பழநி: நவராத்திரியையொட்டி பழநியிலிருந்து திருப்பதி கோயிலுக்கு பூக்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பதி கோயிலில் நவராத்திரிவிழா துவங்கியுள்ளது. அங்கு நடைபெறும் பூஜைகள், அலங்காரத்திற்கு பயன்படும் வகையில் பழநி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் ஆண்டு தோறும் பூக்கள் அனுப்பப்படுகிறது. மாரியம்மன் கோயிலில் பூக்கள் குவிக்கப்பட்டு அனுப்பும் பணி துவங்கியது. தினமும் 500 கிலோ அனுப்பப்படுகிறது. திருப்பதிக்கு பூக்கள் அனுப்புவதை புஷ்ப கைங்கர்ய சபா தலைவர் ஹரிஹரமுத்து, கவுரவ தலைவர் சின்னச்சாமி, செயலாளர் மருதசாமி உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். பூக்கள் தர விரும்புவோர் 94434 03026 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.