Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் இரவில் தங்க அனுமதி ... நீலம்பூர் பிளாக் மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு நீலம்பூர் பிளாக் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதமந்திம் முழங்க அமெரிக்காவில் ஒன்பது கோபுரங்களுடன் பிரமாண்ட ஹிந்து கோவில் திறப்பு
எழுத்தின் அளவு:
வேதமந்திம் முழங்க அமெரிக்காவில் ஒன்பது கோபுரங்களுடன் பிரமாண்ட ஹிந்து கோவில் திறப்பு

பதிவு செய்த நாள்

10 அக்
2023
04:10

வாஷிங்டன், இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்ட பிரமாண்டமான ஹிந்து கோவில், அமெரிக்காவில் திறக்கப்பட்டது. புதுடில்லியில் அக்ஷர்தாம் அமைப்புக்கு சொந்தமான ஸ்ரீசுவாமி நாராயண் கோவில் நிர்வாகத்தினர், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்திலும் இதேபோன்ற பிரமாண்ட கோவிலை கட்டி வந்தனர். ராபின்ஸ்வில்லே பகுதியில், 183 ஏக்கரில், 12 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த கோவில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு முறைப்படி நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. மஹராஜ் சுவாமிகள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க, விழா வெகுவிமரிசையாக நடந்தது. வேத முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலில், 10,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்திய கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் இசைக்கருவிகளும், சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. கோவிலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நீள்வட்ட குவிமாடம், பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். கருவறையுடன் கூடிய பிரதானமண்டபம், 12 துணை கோவில்கள், ஒன்பது கோபுரங்கள், பிரமிடு வடிவிலான ஒன்பது கோபுரங்களுடன் பிரமாண் டமாக அழகிய வேலைபாடுகளுடன் இந்தக்கோவில் கட்டப்பட்டுள்ளது. கோடை வெயில், மழை, குளிர் உட்பட எந்த கால நிலையையும் தாங்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த கிரானைட் மற்றும் பளிங்குக்கற்கள் கோவிலில் பதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு பகுதி இருந்து வந்த, 12,500 தன்னார்வலர்கள், பணிகளில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar