பதிவு செய்த நாள்
11
அக்
2023
10:10
பெங்களூரு; இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான யுத்தம், உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கவனித்தால், ஹாசனின் கோடி மடா திபதி கூறிய ஆரூடம் பலிக்குமா என, மக்கள் அஞ்சுகின்றனர். ஹாசன், அரசிகெரேவின், ஹாரனஹள்ளியில் கோடி மடம் உள்ளது. இதன் மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திரசுவாமிகள், அடிக்கடி ஆரூடம் கூறுவார். அரசியல், இயற்கை சீற்றம், அரசியல்வாதிகள் என, பல விஷயங்களில் இவர் கணித்தது நிஜமாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், ‘இம்முறை கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையாது. ஒரே கட்சி சொந்த பலத்துடன் ஆட்சி அமைக்கும்’ என, கூறியிருந்தார். அதே போன்று காங்கிரஸ், 135 எம்.எல்.ஏ.,க்கள் பலத்துடன் ஆட்சி அமைத்தது. கோடி மடாதிபதி, இரண்டு மாதங்களுக்கு முன், ஆரூடம் கூறியபோது, ‘வரும் நாட்களில் உலகின் ஒரு நாடு, காணாமல் போகும். குண்டு வெடிப்பு, நில நடுக்கம், யுத்த பீதி ஏற்படலாம். மக்கள் கட் டுப்பாட்டை இழந்து, மனம் போன படி நடப்பர். ‘ஷிராவண மாதத்தின் நடுவில், உலக அளவில் விபரீதம் நடக்கும். சர்வதேச அளவில் யுத்தம் நடக்கலாம். சுனாமி, நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், உயிரிழப்புகள் நடக்கும். விஷக்காற்று வீசும். அது அனைத்து இடங்களிலும் பரவும். யுத்த பீதியால், மழையால் இரண்டு நாடுகள், உலக வரை படத்தில் இருந்தே காணாமல் போகும். மக்கள் கட வுள் மீது நம்பிக்கை வைப்பது அவசியம். அப்போதுதான் இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்’எனக்கூறியிருந்தார். தற்போது இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே யுத்தம் மூண்டுள்ளது. இதில், இரு தரப்பிலும் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். போர் தீவிரம் ஆகியுள்ளதால், கோடி மடாதிபதி கூறியது நிஜமாகுமா என, மக்கள் அஞ்சுகின்றனர்.