பதிவு செய்த நாள்
10
அக்
2023
06:10
சூலூர்: மழை வேண்டி மழைச்சோறு எடுத்து வழிபாடு நடந்த அரசூரில், இரு நாட்களில், 31 மி.மீ., மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தங்கு தடையின்றி மழை பெய்ய வேண்டி, சூலூர் அடுத்த அரசூரில், கடந்த, 8 ம்தேதி மழைச்சோறு எடுத்து பெண்கள், சிறுமிகள், அனைத்து கோவில்களிலும் வழிபாடு நடத்தினர். தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட மழைச்சோறு அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. பருவ மழை தவறாமல் பெய்ய வேண்டும் என, பாடல்களை பாடி, மனமுருகி இறைவனை வேண்டினர். இந்நிகழ்வை அடுத்து, 8 ம்தேதி இரவே மழை பெய்தது. அதை தொடர்ந்து நேற்று முன் தினமும் மழை பெய்தது. இரு நாட்களில், 31 மி.மீ., மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழைச்சோறு எடுத்து வழிபாடு நடத்தியதன் பயனாக மழை பெய்துள்ளது. இந்த மழை தொடர்ந்து பெய்தால் உழவு பணியை துவக்க திட்டமிட்டுள்ளோம், என்றனர்.