அயோத்தியில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜய யாத்திரை; பக்தர்களுக்கு அருளாசி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2023 11:10
வாரணாசி; வாரணாசி, அயோத்திக்கு விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள ஸ்ரீசங்கர மடத்தில் உள்ள காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று அயோத்தி நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அயோத்தியில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் காஞ்சி விஜயேந்திர சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நவராத்திரி மற்றும் விஜயதசமி வழிபாடுகளையும் மேற்கொள்ள உள்ளார். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சில மாதங்களாக விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார். காஞ்சியில் இருந்து புறப்பட்டு ஆந்திராவில் சில வாரங்கள் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சென்றார். அங்கு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களின் பிக் ஷா வந்தனத்தையும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அயோத்தி சென்ற அவர், அங்குள்ள சங்கர மடத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அக்.,11முதல் நவ. 1 வரை தங்கி நவராத்திரி, விஜயதசமி பூஜைகளை மேற்கொள்கிறார். அக்.,15 முதல் 23 வரை சாரதா நவராத்திரி; 24ம் தேதி விஜயதசமி; 28ம் தேதி ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் ஆகிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். பக்தர்கள் அனைவரும் பங்கேற்று சுவாமிகளிடம் அருளாசி பெறலாம்.