ஈச்சனாரி மகாலட்சுமி கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2023 10:10
கோவை ; ஈச்சனாரி மகாலட்சுமி கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் கொலு பொம்மை கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதில் மூலவர் துர்கா - லட்சுமி- சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.