திருப்பதி பிரம்மோத்ஸவம்; ஏழு தலை சேஷ வாகனத்தில் வைகுந்தநாதர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2023 10:10
திருப்பதி; திருப்பதி நவராத்திரி பிரம்மோத்ஸவத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பசுவாமி ஏழு தலை சேஷ வாகனத்தில் பரமபத வைகுந்தநாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகமாக நடைபெற்று வருகிறது. விழாவில், தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்து வருகிறார். ஆதிசேஷன் தன் படுக்கையின் நிழலில் இறைவனை சேவித்து தன் பணிவான பக்தியைக் காட்டுகிறான். ராமாவதாரத்தில் லட்சுமணனாகவும், துவாபர யுகத்தில் பலராமனாகவும் ஸ்ரீமந்நாராயணனின் அருகில் எப்போதும் இருப்பவர் ஆதிசேஷன். இத்தகைய சிறப்பு மிக்க ஏழு தலை சேஷ வாகனத்தில் பரமபத வைகுந்தநாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு மலையப்ப சுவாமி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
17ம் தேதி காலை சிம்ம வாகனம் இரவில் முத்து பந்தல் வாகனம் 18ம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம் இரவில் சர்வபூபாள வாகனம் 19ம் தேதி காலை மோகினி அவதாரம் இரவில் கருட வாகனம் 20ம் தேதி காலை அனுமன் வாகனம் இரவில் கஜவாகனம் 21ம் தேதி காலை சூர்யபிரபை வாகனம் இரவில் சந்திரபிரபை வாகனம் 22ம் தேதிமாலை தங்க ரதம் இரவில் குதிரை வாகனம் 23ம் தேதி சக்ர ஸ்நானம்