பதிவு செய்த நாள்
16
அக்
2023
12:10
ஈரோடு; சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தரிசனம் செய்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சை பேச்சிற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய தகவல் தொழில்நுட்பம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு பாரமபரிப்பு துறை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம் வேலுடன் தரிசனம் செய்ய வந்தார். கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சுவாமி முருகன் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: 2024ல் பிரதமர் மோடி தலைமையில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமையும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்பது சுதந்திரமிக்க தனி அமைப்புகள். அவர்களுக்கு கிடைக்கும் தகவல் படி, சோதனையில் ஈடுபடுகிறார்கள்.
அந்த சோதனைகள் எல்லாம் தெரியும். அமைச்சர் ஒருவரக சிறையில் உள்ளார். தி.மு.க எம்.பி ராஜாவின் 15 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மக்களுடைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. திமுக என்றாலே ஊழல், கட்ட பஞ்சாயத்து, வாரிசு அரசியல். தி.மு.க., மக்களுடைய பணம் மற்றும் மக்களுக்கு சேரக்கூடிய திட்டங்களின் பணத்தை சுரண்டுவது தான் நோக்கம். காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்வதை, மத்திய வெளியுறவுத்துறை உடனடியாக மீட்டு கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்.; @இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட்டில் போட்டியில், பாக்., வீரர்கள் சென்ற போது ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்.. என்ற கோஷம் போடப்பட்டது என்ற நிருபர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு, ஒற்றை வரியில் பதில் சொல்ல வேண்டும் என்றால், ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்.. என கோஷமிட்டு கொண்டே மத்திய அமைச்சர் எல்.முருகன் நகர்ந்து சென்றார்.