புரட்டாசி கடைசி சோமவாரம்; புவனேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2023 05:10
கோவை; சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் புரட்டாசி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள புவனேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வெள்ளை நிற வஸ்திரத்தில் பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.