திருப்பதி நவராத்திரி பிரம்மோத்ஸவம்; சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2023 03:10
திருப்பதி; திருப்பதி நவராத்திரி பிரம்மோத்ஸவத்தில் இன்று (17 ம்தேதி) சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகமாக நடைபெற்று வருகிறது. விழாவில், தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், தமிழக கலைக் குழுவினரின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி ராஜி குழுவினர், சென்னையை சேர்ந்த ஸ்ரீமதி புஷ்கலா குழுவினரின் சீனிவாச பத்மாவதி நடனம், சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராஜா குழுவினர், பாண்டிச்சேரியைச் சேர்ந்த விசித்ரா குழுவினரின் நாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. விழாவில் 11 கலைக்குழுக்களும் 284 கலைஞர்களும் கலந்து கொண்டனர். விழாவில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.