பதிவு செய்த நாள்
19
அக்
2023
10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பத்திரிகை, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வினியோகிக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, வரும், நவ., 17 ல் கொடியேற்றத்தடன் தொடங்கி, நவ., 23 ல் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், நவ., 26 ல் அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் சுவாமி கருவறையில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக தீப திருவிழா பத்திரிகை அச்சடிக்கப்பட்டு, கோவில் தங்க கொடிமரம் அருகிலுள்ள சம்பந்த விநாயகருக்கு, சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து வினியோகிக்கும் பணி தொடங்கியது.