அயோத்தி ராமர் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2023 10:10
புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரியில், கோவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமானத்துக்காக, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற, கோவில் அறக்கட்டளை நிர்வாகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் - 2010ன் கீழ், ராமர் கோவில் கட்டுமானத்துக்காக வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பங்களிப்பு அளிக்க விரும்புவோர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.