மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் அமைந்துள்ள அஷ்டா தசபஜ மகாலெட்சுமி துர்காதேவி ஆலயத்தில் நடைபெற்று வரும் சதசண்டியாகத்தில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, நான்காம் நாள் இசைக்கக்கூடிய ஆனந்த பைரவி ராகம் வாசிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீன சைவ மடத்தில் பழமை வாய்ந்த அஷ்டா தசபஜ மகாலெட்சுமி துர்காதேவி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜ மகாலெஷ்மி துர்காதேவியாக காட்சியளிக்கிறார். ஆலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 73ம் ஆண்டு சதசண்டி யாகம் கடந்த 14ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. அதன் ஒரு பகுதியாக 4 நாளான இன்று சதசண்டி யாகம் நடைபெற்று தொடர்ந்து யாகத்தில், புனித கடங்கள் வைக்கப்பட்டு நவசண்டி யாகம் நவக்கிரக யாகம் உள்ளிட்டவை நடைபெற்று பூர்ணாகுதி மஹாதீபாரானை நடைபெற்றது. தொடர்ந்து தேவி மகாத்மியம், ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் வாசிக்கப்பட்டன, நிறைவாக அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. 4ம் நாளான இன்று வாசிக்க கூடிய ராகமான ஆனந்த பைரவி ராகத்தை இசைக் கலைஞர்கள் வாசித்து அம்பாளுக்கு இசை ஆலாபனை செய்யப்பட்டது. நிருதிஆலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுர 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.