Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ... வடபழனி கோவிலில் செல்வ வளம் தரும் கெஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள் வடபழனி கோவிலில் செல்வ வளம் தரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தியின் திருவடியை அடைந்தார் பங்காரு அடிகளார்; சித்தர் முறைபடி மாலை நல்லடக்கம்
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தியின் திருவடியை அடைந்தார் பங்காரு அடிகளார்; சித்தர் முறைபடி மாலை நல்லடக்கம்

பதிவு செய்த நாள்

20 அக்
2023
10:10

மேல் மருவத்தூர்: மேல்மருவத்துார் அம்மா என்று பக்தர்களால் போற்றப்படும் பங்காரு அடிகளார் நேற்று (அக்-19) ஆதிபராசக்தியின் திருவடியை அடைந்தார். அவருக்கு வயது 82. அவரது உடலுக்கு ஓம்சக்தி பக்தர்கள் திரளாக நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பங்காரு அடிகளார் என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆன்மிக குரு. இவர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர். இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் அம்மா என்று அழைக்கப்பட்டு வந்தார்.

வாழ்க்கை வரலாறு; பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்பாள் என்ற மனைவியும் ஜி.பி அன்பழகன், ஜி.பி செந்தில் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர். அன்னை இங்கு சுயம்பு வடிவாக காட்சிதருகிறாள், பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சி இங்கு சிறப்பாகும். மேல் மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோயிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது. இந்த வயல் பகுதியில் இங்கு வந்து இரவில் தங்கும் பக்தர்களின் வசதியைக் கருதி ஒரு கீற்றுக்கொட்டகையாவது அமைக்க வேண்டும் என சில அன்பர்கள் விரும்பினர். ஆனால் அந்த இடத்தில் கொட்டகை அமைக்க அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை மேலும் அந்த நிலத்தில் அடியில் பல சித்தர்கள் இருப்பதாகவும் பங்காரு அடிகளார் தெரிவித்தார். எனவே தான் இந்தக் கோயிலை சித்தர்பீடம் என்று அழைத்தனர். பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோயில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோயிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோயிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆண்டுதோறும் பெண்களே கோயில் விழாவை கொண்டாடுகின்றனர் கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர். மாத விலக்கு என்பது வழக்கமாக வரும் உபாதை என்பதால் அது பற்றியும் பெரிதுபடுத்தி பேசவேண்டியதில்லை என்று கூறியவர் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி சக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பங்காரு அடிகளாரின் நல்லடக்கம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சித்தர் முறைபடி நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆணும், பெண்ணும் சமமாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும், ‘சக்தி இன்றி சிவன் இல்லை என்பதை புரிய ... மேலும்
 
temple news
வில்லிவாக்கம்; அகத்தீஸ்வரர் கோவிலில் சேதமடைந்த கொடிமரத்தை, கடந்த ஆறு மாதங்களாக சீரமைக்காமல் இருப்பது, ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி முதல் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் நடபெறுவதை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார், கூத்தப்பாக்கத்தில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோவிலில், மண்டலாபிஷேக பூர்த்தி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar