மேலுார்: மேலுார், திருச்சுனை பாடகவள்ளி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அக். 18 யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம் கால யாக பூஜை முடிவில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், தட்சினாமூர்த்தி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிசேஷகம் நடத்தினர். அதற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவில் மேலூர், கருங்காலக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.