குருவாயூர் கிருஷ்ணருக்கு தங்க புல்லாங்குழல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2023 06:10
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணருக்கு பக்தன் காணிக்கையாக தங்க புல்லாங்குழல் சமர்ப்பித்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு இன்று ஷார்ஜாவில் வியாபாரம் நடத்தும் கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த ரதீஷ் மோகன் என்பவர் 40 சவரன் எடை கொண்ட தங்க புல்லாங்குழல் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் குடும்பத்தினருடன் வந்த அவரிடம் இருந்து புல்லாங்குழலை கோவில் தேவஸ்தான துணை மேலாளர் லெஜுமோள் பெற்று கொண்டார். அதேநேரத்தில் இவர் எல்லா மலையாள மாதம் 1ம் தேதியில் உள்ள அன்னதானத்திற்கு நிதியுதவி அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.