திருப்பதியில் தீர்த்தவாரி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2023 09:10
திருப்பதி; திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 9ம் நாளான இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.
கடந்த 15 ம்தேதி துவங்கிய நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் உற்சவ மூர்த்தியான மலையப்பசுவாமி நாள்தோறும் விதம் விதமான அலங்காரத்தில் வலம் வந்தார். சுவாமி வலம் வரும்போது பல்வேறு மாநில கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். 9ம் நாளான இன்று பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது, நிறைவு நாளான இன்று சக்ரதீர்த்தம் நடைபெற்றது. சுவாமியின் அம்சமான ஸ்ரீசக்ரத்திற்கு கோவிலின் புனித குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாரின் தீர்த்தவாரியை அடுத்து தெப்ப குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.