அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா ; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2023 11:10
தாடிக்கொம்பு: அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா கண் திறப்பு வைபவத்துடன் சிறப்பாக துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வரும் நிலையில். அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயிலில் இன்று காலை 10:30 மணி அளவில், அம்மன் கண்திறப்பு மண்டபத்திலிருந்து கண் திறப்பு வைபவம் நடந்தது. கோயில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்த நிலையில், அம்மன் ஆயிரம் பொன் சப்ரத்தில் எழுந்தருளி, மக்கள் வெள்ளத்தில் கொழுமண்டபத்திற்கு வந்தடைந்தார். காலை 11: 00 மணியிலிருந்து கொழு மண்டபத்தில் காட்சியளித்த அம்மனை பக்தர்கள் பயபக்தியுடன் தரிசித்து சென்றனர். இரவு 12:00 மணி முதல் வாணக்காட்சி மண்டபத்தில் அம்மன் புஷ்ப விமானத்தில் காட்சியளித்தார். இரவு 12:30 மணிக்கு மேல் மாபெரும் தொடர் வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது.
24.10.23 மதியம் 1:30 மணிக்கு மேல் அம்மன் சொருகுபட்டை விமானத்தில் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இன்றும், வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து, அம்மனை தரிசிக்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் செய்து வருகின்றனர். தாடிக்கொம்பு மற்றும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.