அய்யப்ப பெருமாள் கோவில் நவராத்திரி திருவிழா கோலாகலம்; யானையூட்டு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2023 11:10
பாலக்காடு; அய்யப்பபெருமாள் கோவில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு கொடுந்திரப்புள்ளி கிராமத்தில் உள்ளது அய்யப்ப பெருமாள் கோவில். இக்கோவில் நவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாநவமி நாளான இன்று காலை நிர்மால்லிய தரிசனம், சோபான சங்கீதம், 7க்கு யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டு நிகழ்ச்சி , 7.30க்கு பரக்காடு தங்கப்பன் மாரார் தலைமையிலான கலைஞர்களின் பஞ்சவாத்தியம் முழங்க குருவாயூர் இன்ரசென் என்ற யானை உற்சவ மூர்த்தியின் உருவ சிலை ஏந்தி, ஐந்து யானைகளில் அணிவகுப்பில் காழ்ச்ச சீவேலி நடந்தன. 10 மணிக்கு சிறப்பு ஜபாபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
10.30 மணிக்கு ஐந்து யானைகளின் அணிவகுப்பில் சதீசன் மாராரின் தலைமையில் கலைஞர்களின் பஞ்சாரி மேளம் என்ற அழைக்கப்படும் செண்டை மேளம் வாசிக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து அன்னதானம், அலங்கார பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பஞ்சவாத்தியம், சிங்காரிமேளம், பூக்காவடி, நாதஸ்வரம் என தாளமேள கோஷத்துடன் முத்து மணி குடைகளும் ஆடை அபரணங்களும் அணிந்து அணிவகுத்து நிற்கும் 15 யானைகளின் மீதுள்ள வண்ண குடை மாற்றம் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை, நிறமாலை என சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திவ்யாலங்காரத்துடன் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதையடுத்து ஐந்து யானைகளின் அணிவகுப்பில் செண்டை மேளம் முழங்க உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெற்றது. சாமவேத பாராயண நிகழ்வுடன் விழா நிறைவுபெற்றது.