சின்னதடாகம்: சின்னதடாகம் அருகே உள்ள உச்சையனூர் மகாலட்சுமி அம்மன் திருக்கோவில் எட்டாம் ஆண்டு நவராத்திரி விழா நிறைவடைந்தது.
இக்கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கடந்த, 15ம் தேதி முதல் தினசரி அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, நாம சங்கீர்த்தனம், மகா கொலு தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடந்த இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மகாலட்சுமியை வழிபட்டு இறையருள் பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தடாகம்புதூர், உச்சையனூர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.