அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி வரம் தரும் வயித்துமலை அடிவாரத்தில் ஓம் சிவசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இங்குள்ள தில்லை மாகாளிக்கு ஏகாதின லட்சாரிச்சனை விழா நடந்தது. இன்று காலை 8:00மணிக்கு லட்சார்சனை யாக பூஜைகள் நடத்தப்பட்டன, தொடர்ந்து தில்லை காளியம்மன், தாலி காத்த காளியம்மன், சிவசுப்பிரமணியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் ஆராதனைகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அனைத்து அம்மன், சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஹரிபகவான் செய்திருந்தார்.