திருப்பதியில் ஒரு நாள் அன்னதான நன்கொடை ரூ.38 லட்சமாக உயர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2023 10:10
திருப்பதி; திருமலையில் அன்றாடம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான செலவு ரூ.33 லட்சத்தில் இருந்து ரூ.38 லட்சமாக உயர்வு. காலை டிபன் - ரூ.8 லட்சம்; மதியம், இரவு உணவு - தலா ரூ. 15 லட்சம் வீதம் தனித்தனியாகவும் நன்கொடை வழங்கலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் அன்றாடம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான செலவு ரூ.33 லட்சத்தில் இருந்து ரூ.38 லட்சமாக உயர்ந்துள்ளது. இது அன்னதான பிரசாதத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை உயர்வு காரணமாக திருத்தியமைக்கப்பட்டு உள்ளது. காலை உணவுக்காக 8 லட்சம் செலவையும், மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு 15 லட்சம் ரூபாயும் செலவாகிறது. பக்தர்களுக்கு இலவச உணவு திட்டம் 1985 இல் தொடங்கப்பட்டது, ஆனால் பின்னர் அது 1994 ல் எஸ்.வி. நித்திய அன்னதான அறக்கட்டளையாக மாறியது. ஜூலை 2011 ல் மாத்ரி தரிகோண்டா வெங்கமம்பாவின் பெயரில் அன்ன பிரசாத வளாகம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது. இன்று அன்ன பிரசாதம் வைகுண்டம் வரிசை வளாகத்தின் அனைத்து பிரிவுகளிலும் விநியோகிக்கப்படுகிறது. திருமலையில் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் உணவு சாப்பிடுகின்றனர். விழா நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தையும் தொடும்.