இது எனது அதிர்ஷ்டம்; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பெற்ற பிரதமர் நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2023 11:10
அயோத்தி: அடுத்தாண்டு ஜன., 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவிற்காக உடுப்பியைச் சேர்ந்த பிதாதீஸ்வர ஜகத்குரு மாதவாச்சார்யா, சுவாமி கோவிந்ததேவ் கிரி மற்றும் ஸ்ரீ நிருபேந்திர மிஸ்ரா ஆகியோர் பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் வழங்கி, அழைப்பு விடுத்தனர். கும்பாபிஷேகம் விழாவுக்கான அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இது குறித்து பிரதமர் கூறியதாவது; இப்போதுதான் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரி என்னைச் சந்திக்க வந்தார். ஸ்ரீ ராம் மந்திரில் பிரான பிரதிஷ்டையின் போது அயோத்திக்கு வரும்படி அவர் என்னை அழைத்துள்ளார். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். என் வாழ்நாளில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நான் காண்பது எனது அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.