பதிவு செய்த நாள்
27
அக்
2023
05:10
தஞ்சை ; கடந்த, 2010ம் ஆண்டு, பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. அப்போது, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடந்தது. முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலுக்குள் நடந்த ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை காண வந்தார். அதன் பின், 2011, 2016ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், தி.மு.க., தோல்வியை சந்தித்தது; கருணாநிதி மீண்டும் பெரிய கோவிலுக்கு வர முடியாமல் போனது. அப்போது விழாவுக்கு வந்த எம்.பி., ராசாவுக்கும், 2 ஜி வழக்கு சிக்கல் உருவானது. பெரிய கோவிலுக்கு வரும் தலைவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழும் என்று கருதப்படுகிறது .மேலும் இதற்கு, முன்னாள் பிரதமர் இந்திரா, எம்.ஜி.ஆர்., முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா போன்றவர்களை உதாரணமாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மாமன்னன் ராஜராஜ சோழனின், 1,038வது ஆண்டு விழாவையும், அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் என பலரும் புறக்கணித்தனர். இந்த மூட நம்பிக்கைக்கும், சென்டிமென்டுக்கும் எப்போது தான் முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ என, பொதுமக்கள் புலம்புகின்றனர்.