முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. கார்த்திகை நாளில் முருகனை வழிபடுவதுமிக சிறப்பானதாகும். செவ்வாய்க்கு அதிபதியான முருகனை இன்று தரிசிப்பது சிறப்பு. முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி 12ஆண்டுகள் இந்த விரதமிருந்து, எல்லா முனிவர்களிலும் மேலாக எல்லா உலகமும் சுற்றி வரும் வரம் பெற்றார். இவ்விரதநாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டிக்கவசம், சண்முககவசம் படிக்க வேண்டும். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் கேட்பதும் நல்லது. அரோகரா சொல்லி ஆறுமுகனை வழிபட அனைத்தும் கிடைக்கும். கார்த்திகையில் கந்தனை வழிபட துன்பங்கள், கடன் தொல்லை நீங்கும். நாமும் கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமானை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்.