சந்திரோதய கவுரி விரதம்; சிவ பார்வதி தரிசனம் சிறப்பு தரும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2023 10:10
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் அம்மனை வைத்து வழிபட வேண்டும். கோயிலில் சிவனையும், அம்மனையும் வழிபட சிறப்பான பலன் கிடைக்கும். இன்று பார்வதியை பூஜிக்க கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, பாசம் ஏற்படும். அம்மனை வழிபட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சந்திரோதய கவுரியில் விரதமிருந்து வழிபட மனக் குழப்பங்கள் நீங்கும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். சுபகாரிய தடைகள் யாவும் விலகும்.