புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்த சித்தி விநாயகர்; வழியெங்கும் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2023 12:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறை சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, விநாயகர் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் அருகே சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து மாலையில் விநாயகர் பெருமான் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சித்தி விநாயகர் எழுந்தருள செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து புஷ்ப பல்லக்கு மாயூரநாதர் கோயிலின் தேரோடும் நான்கு வீதிகளின் வழியே வலம் வந்து, மீண்டும் கோயிலை அடைந்தது. வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் முன்பு விநாயகர் பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.