Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவிலில் 161 அடி உயர ... அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயார்; 10 கோடி குடும்பத்திற்கு அழைப்பு அயோத்தி ராமர் கோவில் ...
முதல் பக்கம் » ஆன்மிகபூமி அயோத்தி » செய்திகள்
நாடே எதிர்பாக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; சிலையை கருவறைக்கு எடுத்து செல்கிறார் பிரதமர்!
எழுத்தின் அளவு:
நாடே எதிர்பாக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; சிலையை கருவறைக்கு எடுத்து செல்கிறார் பிரதமர்!

பதிவு செய்த நாள்

03 நவ
2023
01:11

அயோத்தி: தற்போது அயோத்தியில் தற்காலிக இடத்தில் உள்ள ராமர் சிலையை, அங்கிருந்து அயோத்தியில் கட்டப்படும் புதிய கோயிலுக்கு எடுத்து செல்லும் புனித பணியை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க ராமர் கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேசம், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கான கட்டுமானத்தை கடந்த, 2020 ஆக.,5ல் பூமி பூஜையுடன், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன்பின், கோயில் கட்டுமான பணிகள், முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன. அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம், தற்போது தற்காலிக இடத்தில் இருக்கும் ராமர் சிலையை, அங்கிருந்து புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கருவறை (கர்ப்பகிரகம்) வரை பிரதமர் மோடி எடுத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மேலும் கூறப்படுவதாவது: சுமார் 500 மீ., தூரம் ராமர் சிலையை எடுத்து செல்லும் புனித பணியை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வில்  உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து அன்று காலை 11:30 மணி முதல் 12:30 மணிக்குள் முக்கிய பூஜைகள் நடக்கிறது. அதில், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அர்ச்சகர்கள் பங்கேற்கின்றனர். பிறகு, ஹிந்து மத சம்பிரதாயங்களை தொடர்ந்து கர்ப்பகிரகத்தில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இதனிடையே, 3 விதமான ராமர் சிலை செய்வதற்கான பணிகளில் கோயில் அறக்கட்டளை தீவிரம் காட்டி வருகிறது. அதில் எந்த சிலையை கர்ப்பகிரகத்தில் வைப்பது என்ற முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.

அதேநேரத்தில், ராஜஸ்தான் மார்பிள் அல்லது கர்நாடகா கிரானைட் கற்களால் செய்யப்படும் ராமர் சிலையில் ஒன்றை கர்ப்ப கிரகத்தில் வைக்கப்படும் என தெரிகிறது. இதில் உறுதியான முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. மற்றொரு சிலையானது, கோயிலின் இரண்டாவது தளம் கட்டுமான பணிகள் முடிவடைந்த உடன் வைக்கப்படும். இரண்டாவது தளத்தில் ராமர் தர்பார் அமைக்கப்படும். கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, சரயு மற்றும் புனித நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.  இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது. இந்த முக்கிய நிகழ்வுக்கு பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளின் தலைவர்களும் அழைக்கப்படுகின்றனர். இந்த விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் ஆன்மிகபூமி அயோத்தி செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடும் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் ராம் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டது முதல் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
உத்தரப்பிரதேசம்; உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar