மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே எரவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்ட ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, எரவாஞ்சேரி கிராமத்தில் தர்மசாஸ்தா என்ற ஐயப்பன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு நேற்று முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, மகாபூர்ணஹதி செய்யப்பட்டது. பின் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு, கோயிலை வலம் வந்து கும்பகலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விநாயகர், முருகன், தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.