போத்தனூர்: போத்தனூரிலிருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் வழியில் ரயில்வே பாலம் அருகே கோகுலம் கோசாலை உள்ளது. அயோத்தியில் அடுத்தாண்டு ஜன.,ல் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இவ்விழா சிறப்பாக நடக்கவும், உலக மக்கள், நாட்டின் நலனுக்காகவும், ராம நாம தாரக ஜப யக்ஞம் இன்று காலை. 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை இங்கு நடக்கிறது.