கொடைக்கானல், கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடியில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கொடைக்கானல் டிப்போ காளியம்மன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தது. மிளகு, தேங்காய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் உள்ள பைரவர் கோயிலில் தேய்பிறை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.