கோபால்பட்டி, கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியொட்டி சொர்ணா ஆகாச பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வஸ்திரம் சாத்தப்பட்டு, வடை மாலை, நெய் தீபம் ஏற்றி சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தது. சொர்ணா ஆகாச பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள பைரவர் சன்னதி, அய்யாபட்டி சிவதாண்டவப்பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள வைரவர், வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோயிலில் உள்ள பைரவர் சன்னதிகளிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.